Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தண்ணீரில் போகும் மீனவர்கள் கண்ணீருடன் திரும்புகின்றனர் - மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

கச்சத் தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.இந்த நிலையில் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கே வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கியது.மேலும் மீனவர்களின் வலையை அறுத்ததோடு அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் எடுத்து சென்றனர்.100 க்கும் மேற்பட்ட படகுகளில் உள்ள மீனவர்களை தாக்கியதோடு படகுகளையும் சேதப்படுத்தியுள்ளது.இதனால் மீனவர்கள் பயத்துடன் கரைக்கு திரும்பினர்.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது.இதனால் இராமேஸ்வர மீனவர்கள் மிகுந்த மன உலைச்சலுடன் உள்ளனர்.தண்ணீரில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் கண்ணீருடன் திரும்பி வரும் சோகம் நடந்த வண்ணம் உள்ளது.மீனவர்கள் விடயத்தில் மத்திய அரசு மிகுந்த அலச்சியத்துடன் செயல்படுகிறது.மீனவர்கள் தண்ணீரிலே இருப்பதால் அவர்களின் கண்ணீர் மத்திய அரசுக்கு தெரியவில்லையா? இல்லை இலங்கையை கண்டு இந்தியா பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post