Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அட்டகத்தி, பீட்சா வரிசையில் சி.வி.குமாரின் புதிய படம்.


திருக்குமரன் என்டர்டைன்மென்ட் பட நிறுவனத்தின், சி.வி.குமார் அவர்களுக்கு தமிழ் சினிமா மூலம் மிக பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.அவருடைய முதல் தயாரிப்பான "அட்டகத்தி"மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து, அண்மையில் இவர் தயாரிப்பில் வெளியான "பீட்சா" படமானது மிக சிறப்பாக திரையிடப்பட்டு வருகிறது.இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் காட்சிகளின் எண்ணிக்கையை கூட்டியுள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

இப்போது தன்னுடைய மூன்றாவது படத்திற்கான வேலைகளை  ஆரம்பித்துள்ளார் சி.வி.குமார்.இம்முறை புதுமுக இயக்குர் மூலமாக தன்னுடைய படத்தை இயக்கவுள்ளார் இவர்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நலன் என்பவரே இப்படத்தை இயக்கவுள்ளார்.இன்னும் படத்திற்கான பெயர் தேர்வு செய்யப்படாத நிலையில்,எப்போதும் சி.வி.குமாரின் படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் அவர்களே இப்புதிய படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் மிக அண்மையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[vuukle-powerbar-top]

Recent Post