Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து ~ தொடர் போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலை அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால்,அவதிப்பட்டு மக்கள், சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

திருவள்ளூரில் நடந்த சாலை மறியலில், போலீசார் தடியடி நடத்தினர். வேலூர் மாவட்டத்தில் நடந்த சாலை மறியல், வன்முறையாக மாறி, மின்சார அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 16 மணி நேரத்துக்கு மேலாக நிலவும் மின்வெட்டால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மின்வெட்டை கண்டித்து, நேற்று இரவு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மி்ன்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

தேனியில் மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகலில் நடைமுறையில் இருக்கும் மின்வெட்டை சமாளித்துவிடும் பொதுமக்கள், இரவு நேரங்களிலும் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால்தான் வீதிக்கு வந்து போராடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post