Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தியாக திருநாள் வாழ்த்து ~ வைகோ

ஈதுல் அல்கா எனப்படும் ஹஜ் திருநாள் தன்னையும், தனது உடமைகளையும் அர்ப்பணிக்கக் கூறும் தியாகத் திருநாள்.

ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகத் தங்களையே தியாகம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் உன்னதத் திருநாள்.

ஆண்டுகள் பல்லாயிரம் ஆனாலும், இப்ராகீம் நபியின் செயல் - பெற்ற மகனையே அறுத்துப் பலியிட முன்வந்ததும், தொடர் சோதனைகள் அனைத்தையும் சாதனைகள் ஆக்கியதும், அது காவியமானதும் காலத்தால் அழியாத தியாக ஓவியத்தை வரைந்தது.

இத்தியாகத் திருநாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்,
25.10.2012 மறுமலர்ச்சி தி.மு.க.
[vuukle-powerbar-top]

Recent Post