Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீவிரமாக பரவும் டெங்கு ~ அதிகரிக்கும் உயிர் பலி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புகளும் அதிகரித்துள்ளன. 

டெங்கு காய்ச்சல் சென்னையில் பரவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை சென்னை மாநகராட்சி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டேன்லி மருத்துவமனையில் 12 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் பலரும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் 26 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை சென்னை மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி கிளி்த்தான் பட்டறை பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான சுப்பிரமணி என்பவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரை 2 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 200 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post