Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புழல் சிறையில் இருந்து செந்தூரன் விடுதலை. கோரிக்கை கைவிடவில்லை என அறிவிப்பு



புழல் சிறையில் இருந்து செந்தூரன் விடுதலை. கோரிக்கை கைவிடவில்லை என அறிவிப்பு. 

கடந்த ஒரு மாத காலமாக சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்த ஈழத் தமிழர் செந்தூரன் இன்று பிணையில் விடுவிக்கப் பட்டார். அவருக்கு அம்பேத்கர் பாசறையை சேர்ந்த திரு. சிவகுமார் மற்றும் நாட்டுப் பற்றாளர் இயக்கத்தை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்களும் பிணையில் வருவதற்கு கையெழுத்து போட்டனர். இதனால் இன்று பிணையில் வெளிவந்த செந்தூரன் உடனே பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். 

செந்தூரன் நமக்கு கூறியதாவது. 

நான் 39 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து போராடினேன். சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் , முகாமை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நான் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கினேன். ஒரு மாதத்திற்கு மேலாக உண்ணா நிலையில் இருந்தேன் . அரசு எந்த பேச்சு வார்த்தைக்கும் வரவில்லை . மாறாக என் மீது தற்கொலை வழக்கு தொடுத்து என்னை புழல் சிறையில் அடைத்தது . சிறையிலும் நான் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தேன். இரண்டுமுறை பிணையில் நான் விடுவிக்கப் பட்டாலும் , காவல்துறை என் மீது மீண்டும் வழக்கை போட்டு என்னை சிறையில் தள்ளியது. சிறையிலும் உண்ணா நிலை போராட்டத்தை நான் முன்னெடுத்ததால் காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி ராமானுஜம் அவர்களின் உதவியாளர் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உண்ணா நோன்பை கைவிடும்படி கேட்டுக் கொண்டார் . ஆனால் நான் என் கோரிக்கையை நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டேன். அவரும் படிப்படியாக  முகாமில் இருந்து ஈழத் தமிழர்களை  விடுதலை செய்வோம் என்று உறுதி அளித்தார் . இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லா ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்து விடுவோம் என உறுதி கூறினார். அதன் படி அக்டோபர் மாதத்தில் ஐந்து பேர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பத்து நபர்களை விடுதலைப் பட்டியலில் உள்ளனர். கடந்த நாற்பது நாட்களில் பன்னிரெண்டு பேர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அரசு அளித்த உறுதி மொழி இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து முகாம் வாசிகள் அனைவரும் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடுவோம்.  இப்போதைக்கு அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் நான் உண்ணா நிலையை கைவிட்டுள்ளேன் என்று செந்தூரன் கூறியுள்ளார்.


   
[vuukle-powerbar-top]

Recent Post