Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அமைச்சரவை மாற்றம் - பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றிய முக்கிய ஆலோசனைக் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.


பிரதமர் மன்மோஹன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றிய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். புதிய அமைச்சர்களை சேர்ப்பது குறித்தும் ஊழல் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களை நீக்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் மேலும் அதிக அளவில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கே வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் ஒருவருக்கு மட்டுமே பதவி கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக-வுக்கு புதிய பதவிகள் வேண்டாமென்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post