Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடிகை வேகாவை கொண்டாடும் இந்தி சினி உலகம்.


இயக்குனர் வெங்கட் பிரபுவின் "சரோஜா" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை வேகா.இப்படத்தின் பின்னர் தேசிய விருது பெற்ற "பசங்க" படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் அவரது வெகுளித்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது.

"பசங்க" படத்தின் வெற்றியை தொடர்ந்து. சிம்புவின் "வானம்" படத்திலும்  நடித்திருந்தார் வேகா.தற்போது இந்தி சினி உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர், இயக்குனர் பெடாப்ரடா பெயின் இயக்கத்தில் "சிட்டகாங்" என்ற இந்திப் படத்தில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் நௌஷதீன் சித்திக் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் இப்படத்தை பார்த்த இந்தி சினி உலக சக்கரவர்த்திகளான,ஷாருக் கான்,அமிதாப் பச்சன்,விசால் பரத்வாஷ் மற்றும் தேவ் பனேகள் ஆகியோர் இப்படத்தில் நடித்த
 அத்தனை கலைஞர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு வெற்றியாக,அண்மையில் நியூ யார்க் நகரில் நடைபெற்ற இந்திய சினிமா விழாவில், முதல் படமாக இப்படமே திரையிடப்பட்டிருந்தது.

"ஆம்ராஸ்"என்ற இந்திப் படத்தின் மூலமாக இந்தி சினி உலகில் காலடி எடுத்த வைத்த வேகாவிற்கு, அப்படம் பெரியளவில்  பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.எவ்வாறாயினும் "சிட்டகாங்" படத்தில் அவரது நடிப்பை கண்டு வியந்து போயுள்ளது இந்தி சினி உலகம்.பாராட்டு மழையால் நனைத்து வரும் வேகாவிற்கு நாம் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

[vuukle-powerbar-top]

Recent Post