Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை



கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை

       திருவனந்தபுரம் - மங்களூர் 16603/16604  மாவேலி  எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கபட்டது. இது குறித்து தலைவர் S.R ஸ்ரீராம் மனுவில் கூறியதாவது, கன்னியாகுமரி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் ஆகும். மங்களூர் கர்நாடகா மாநிலத்தின் முக்கிய துறைமுக நகரம் ஆகும். மங்களூர் ,உடுப்பி மற்றும் அதை சார்ந்த பகுதி மிக முக்கியமான முகாம்பிகா தேவி கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவாலையங்கள் உள்ளன.  கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கட்டுமான தொழிலுக்காகவும் மீன்பிடி தொழிலுக்கவும் தினமும் நூற்றுக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனா. இவ்வாறு கேரளாவிற்கு செல்வதற்கு மாலை நேரத்தில் ஏந்த தினசரி ரயில் சேவை இல்லை. குமரி மாவட்டத்திலிருந்து கோழிகோடு மற்றும் மங்களூரில் உள்ள NIT யில் படிக்கும் மாணவர்களுக்கும் நேரடி இரவு ரயில் வசதி இல்லை. கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தென்பகுதிகளான நேமம், நெய்யாற்றங்கரை, பாறசாலை பகுதியிலிருந்து கேரளா மாநிலத்தின் மலபார் பகுதிகளான சொர்னூர், கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணுர் , காசரகோடு மற்றும் மங்களுருக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் கேரளாவை சார்ந்த மாணவர்கள் விடுமுறைக்கு வீடுகளுக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லாமல் மிகவும் சிரமபடுகின்றனர். இவர்கள் தற்போது திருவனந்தபுரம் வரை பேருந்தில் பயணம் செய்து அடுத்து திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் மார்க்கம் செல்லும் ரயிலில் பயணிக்கின்றனர்.

                 திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்களும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வராந்திர ரயில்களும் இயக்கபடுகின்றன. திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களூர் புறப்படும் திருவனந்தபுரம் - மங்களூர் 16603/16604  மாவேலி  எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஏழு ஆண்டு கால நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கை நிறைவேறபடாமல் உள்ளது. மங்களூர் ரயில் பயணிகள் சங்கத்தினரும் கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி நேர ரெயில் இயக்க கோரிக்கை வலியுறுத்தி ரயில்வே  அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி குமரி மற்றும் மங்களூர் பகுதி பராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கோரிக்கை வலியுறுத்தபட்டது. அவர்கள் மூலமாகவும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டது. 

                  திருவனந்தபுரம் - மங்களூர் மாவேலி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்வதற்கு போதிய நேரம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த ரயில் காலையில் வந்துவிட்டு மாலைவரை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் காலியாகவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆதலால் திருவனந்தபுரம் - மங்களூர்  மாவேலி  எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு ரெயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.  

[vuukle-powerbar-top]

Recent Post