Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு விருப்பம் : சல்மான் குர்ஷித் தகவல்

பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு விரும்புவதாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஃபருக்காஃபாத்தில் பேசிய அவர், பெட்ரோலிய பொருட்கள் மீது தொடர்ந்து மானியம் அளிக்கப்பட்டால், மக்கள் மிகவும் பயனடைந்து வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் ஆகியவற்றை நிறுத்த வேண்டி வரும் என்று கூறியுள்ளார். 

இதனால் பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிட மத்திய அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

டீசல் விலை உயர்வுக்கு முன்பு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தார். 

தற்போது ஏற்பட்டு வரும் 1 புள்ளி 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பையும் மத்திய அரசு தாங்க வேண்டியுள்ளது என்றும் குர்ஷித் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post