Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலையால் பாதிப்பு இல்லை : ரஷ்ய துணைப் பிரதமர்

கூடங்குளம் அணுஉலை உலகிலேயே மிகவும் நம்பகமான அணுஉலையாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி ரோகோஜின்.

அணுஉலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அதற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். “போராட்டம் தொடரும்” :

இதனிடையே கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி, வரும் 29ம் தேதி திட்டமிட்டபடி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று தெரிவித்தார்.

மேலும், வரும் 22 ஆம் தேதி கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் ஐந்து அம்ச கோரிக்கை மனு ஒன்றை அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அணுஉலையை எதிர்க்க மாட்டோம்: 

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுஉலையை தொடங்கக்கூடாது என மார்க்ஸிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தி உள்ளார்.

அதேநேரத்தில் கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்ற கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post