Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தற்போது மேலும் ஒரு யூனிட் பழுது

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு யூனிட்கள் பழுதடைந்து நேற்று சரியான நிலையில், தற்போது மேலும் ஒரு யூனிட் பழுதடைந்துள்ளது. 

அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில், ஏர் ஹீட்டர் பழுதாகியுள்ளது. இதனால் அந்த யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பழுதை சரிசெய்ய ஒரிரு நாட்கள் ஆகும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அனல் மின் நிலையத்தில் உள்ள தளவாடப் பொருட்கள் காலாவதியாக விட்டதாகவும், இதனால் தான் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

அனல் மின் நிலையத்தில் ஏற்கனவே பழுதான ஒன்றாவது மற்றும் நான்காவது பூனிட்களில் நேற்று முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த யூனிட்களில் இருந்து முழு அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மற்ற 4 யூனிட்களில் இருந்து மொத்தம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் 600 முதல் 650 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post