Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அரசுக்கு கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரிக்கை

தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ளகப் பொறிமுறைகள் தோல்வியுறுமானால், வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்படும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார். 

இலங்கையில்  உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அவர், நீர்கொழும்பில் கர்தினால் குரே நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 

“தேசியப் பிரச்சினையை கையாளும் விடயத்தில் வளைந்து கொடுப்பது முக்கியமானது. 

அடிப்படையில் ஒரு உள்நாட்டு விவகாரமான, இந்தத் தேசியப் பிரச்சினையுடன் தொடர்புடையவர்கள் சரியான நிலைப்பாடுகளை எடுக்கத் தவறினால், அது மிகப்பெரிய தவறாக அமையும். 

உள்ளக இணக்க முயற்சிகள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது போனால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

நாம் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சில வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலைமையைக் காரணம் காட்டி வெளியக சக்திகள் தலையிடுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. 

வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொம்மை அரசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஆட்சியாளர்கள் எச்சரிக்கையோடு செயற்படாது போனால், இலங்கை கூட அதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடலாம். 

உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு காணத்தவறினால், வெளியக தலையீடுகள் ஏற்படக் கூடும்.” என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post