Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிருஷ்ணகிரியில் போலி காவல்துறை அதிகாரி கைது

காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஆந்திர இளைஞரை கிருஷ்ணகிரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் நேற்று மாலை, வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, காட்டுநாயனப்பள்ளி என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான கார் சோதனை செய்தனர். 

அந்த காரில் போலீஸ் என்று எழுதப்பட்டிருந்தது. காரில் இருந்த இளைஞர், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், ஆந்திராவில் கூடுதல் எஸ்.பி.யாக பணிபுரிவதாகவும் கூறினார். 

இதனையடுத்து, உடனடியாக ஆந்திராவுக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளைஞர் சொன்னது பொய் என தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் போலீஸ் போல் நடித்து, பல்வேறு மாநிலங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவரிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post