Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரனை

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரனை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.இதற்க்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரனையில் மனுதாரரின் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க இந்திய அணு சக்திக் கழகம் மற்றும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்புயுள்ளது குறிப்பிடத்தக்கது.பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூசன் வாதாடுகிறார். 
அணு உலை பாதுகாப்பு சம்பந்தமான 17 பாதுகாப்பு அம்சங்களில் கூடங்குளத்தில் 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான பதிலகளை இன்று மத்திய அரசு கொடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post