Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வரும் மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் - விஜயகாந்த்



வரும் மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும். ஒருவேளை மக்களுக்கான கொள்கை, திட்டங்களை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்கும் கட்சியோடு கூட்டணிப் பற்றி யோசிப்போம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். ரிஷிவந்தியத்தில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஜயகாந்த். முன்னதாக மூங்கில்துறைப்பட்டில் பயணியர் நிழற்குடையைத் திறந்துவைத்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நாற்காலிகளை வழங்கினார். வாணாபுரம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகண்டை கூட்ரோடில் இலவச கணினி மையத்தைத் திறந்துவைத்தும் விஜயகாந்த் இவ்வாறு பேசினார்.   மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும். நல்லவர்களை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். கூட்டணி குறித்து...: கூட்டணி வைத்ததுபோதும். நான் என்றைக்கும் மக்களை நம்பி உள்ளேன். கடவுள் வடிவில் மக்களை பார்க்கிறேன் என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post