Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சௌந்தர்யாவின் சொத்து மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு.


தமிழ் சினி உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி,பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தன் அண்ணன் அமர்நாத்துடன் விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவ்விமானம் விபத்துக்குள்ளானதில்,அவர் மரணமடைந்திருந்தார்.

அவ்வாறு அவர் மரணம் அடைந்த அத்தருணம் வரை தென் இந்திய சினி உலகில் மிக முக்கியமான நடிகையாக, எல்லா நடிகர்களினதும் தேர்வு நாயகியாக இருந்திருந்தார்.

சினி உலகில் அவர் இருந்த காலகட்டத்தில், அவர் கை வசம் இருந்த சுமார் 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தும் அவரின் பெற்றோரான,கே.எஸ்.மஞ்சுளா மற்றும் ஜி.எஸ்.ரகு ஆகியோரின் மேற்பார்வையில் உள்ளது.

இதற்கிடையே சௌந்தர்யாவின் கணவர் தற்போது சௌந்தர்யாவின் அண்ணன் மனைவி நிர்மலாவை இரண்டாம் தாரமாக மணம் புரிந்துள்ளார்.நிர்மலாவிற்கு, அமர்நாத் மூலமாக சத்விக் என்ற ஆண் குழந்தை உண்டு.

தற்போது சத்விக் தனது தந்தையின் பெற்றோர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.தனது தந்தையின் சொத்துக்களை தாங்கள் அனுபவிப்பதற்கு ஒருபோதும் அவர்கள் சம்மதித்ததில்லை என்றும்,அச்சொத்துக்களில் தனக்கே அதிகளவிலான உரிமை உண்டு என்றும், அவ்வாறு அச்சொத்துக்களை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வழக்கை பதிவு செய்த பெங்களூர் காவல் நிலையம், மஞ்சுளா மற்றும் ரகுவிற்கு பிடிப்பாணை பிறப்பித்துள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post