Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சல் தீவிரம் - கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு பெண் பலி

டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில் மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரைச் சேர்ந்தவர் தேன்மொழி 21 வயதான இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.பின்னர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை தேன்மொழி உயிரிழந்துள்ளார்.

இதோடு டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post