Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஸ்ரீதேவிக்கு இணையாக பேசப்பட்ட தமன்னா..


தென் இந்திய சினிமாவில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து, தனது அசாத்தியமான  நடிப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா.

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள்  மிக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தன.தற்போது தமிழ் சினிமாவில் அதிக  வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், தெலுகு சினி உலகில் அவர்  கவனம் திசை திரும்பியிருந்தது.

தென் இந்திய சினிமா உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகைக்கும் குறைந்தது ஒரு இந்திப் படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற கனவு இருப்பதுண்டு.அந்த கனவு "ஹிம்மத்வாலா" என்ற இந்திப் படம் மூலமாக தமன்னாவிற்கு நிறைவேறவுள்ளது.

இயக்குனர் சஜீத் கான் இயக்கத்தில், அஜய் தேவ்கன் ஜோடியாக "ஹிம்மத்வாலா" படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.இப்படமானது 1983 ஆம் ஆண்டு இதே பெயரில் ஸ்ரீதேவி மற்றும் ஜிஜெந்திரா நடிப்பில் வெளியாகியிருந்தது.

ஸ்ரீதேவி கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியுள்ள தமன்னாவை பற்றி கருத்து தெரிவித்த இப்படத்தின் இயக்குனர்,ஸ்ரீதேவியின் அடுத்த நகர்வை தமன்னா நிச்சயம் இந்தி சினி உலகில் அரங்கேற்றுவார் என்று தெரிவித்தார்.


[vuukle-powerbar-top]

Recent Post