Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமலுக்கு வந்தது கடவுசீட்டு கட்டண உயர்வு

கடவுசீட்டு விண்ணப்பக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  கடவுசீட்டு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கடைசியாக கடவுசீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான கடவுசீட்டு கட்டணம் 40 அமெரிக்க டாலர்களில் இருந்து 75 அமெரிக்க டாலர்களாகவும், 48 யுரோவில் இருந்து 60 யுரோக்களாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளாக நிர்வாகம், முதலீட்டு செலவு, கருவிகள் வாங்குதல், காவல்துறைக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை, தபால் துறைக்கான கட்டணம், அச்சக செலவு, தகவல் தொழில்நுட்ப செலவு போன்றவை பெருமளவு அதிகரித்ததால், கடவுசீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post