Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராணுவக் காவலில் இருந்து குமரன் பத்மநாதனை விடுதலை செய்தது இலங்கை அரசு


 ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குமரன் பத்மநாதனை, ராணுவ காவலில் இருந்து இலங்கை அரசு விடுவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை யில் தேடப்படும் வரும் குற்றவாளிகளில் ஒருவர் குமரன் பத்மநாதன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பிரமுகராக விளங்கியவர் கே.பி. இவரை கைது செய்வதற்காக இன்டர்போல் போலீஸ் மூலம் சர்வதேச நாடுகளுக்கு நோட்டீசும் வெளியிடப்பட்டுள்ளது. புலிகளின் ராணுவ ரீதியான தோல்விக்கு புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை கே.பி. அறிவித்து கொண்டார். இதன்பின், கடந்த 2009ஆகஸ்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவர், இலங்கைக்கு அழைத்து வரப் பட்டு ராணுவ காவலில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான கே.பி.யை இலங்கை அரசு ராணுவ காவலில் இருந்து நேற்று விடுதலை செய்தது. அவருக்கு எதிராக இன்டர்போல் போலீசார் கைது நோட்டீஸ் வெளியிட்டுள்ள நிலையில், அவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்று ராணுவ ஊடகப்பிரிவு தலைவர் லட்சுமண் ஹூலுகல்லேயிடம் கேட்டபோது, ‘’இலங்கை யின் வடபகுதியில் கே.பி. தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் மீது எந்த நீதிமன்ற வழக்கும் இல்லை. இதனால் தன்னுடைய தொண்டு நிறுவன பணிகளை கவனிப்பதற்காக கே.பி. விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் அரசுக்கு எதிராக போராடியவர், தற்போது அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது, வரவேற்கத்தக்க விடயம் ’’ என்றார. 

இந்நிலையில் இலங்கை அரசுடன் கே பி இணைந்து செயல்பட்டு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
[vuukle-powerbar-top]

Recent Post