"துப்பாக்கி" படத்தின் கதையானது விஜய்க்காக எழுதப்படவில்லை என்றும், பாலிவூட் நாயகன் அக்ஷய் குமாருக்காக எழுதப்பட்டதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார் "துப்பாக்கி"பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
"கஜினி"படத்தை தமிழில் இருந்து இந்திக்கு மொழிமாற்றுப் படமாக அவர் இயக்கிய பின்னர், இந்தி சினி உலகில் அவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, நேரடியாக ஒரு இந்திப் படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முருகதாஸ் அதற்காக "துப்பாக்கி" படத்தின் கதையை தயார் செய்துள்ளார்.
ஆயினும், அக்ஷய் குமாரை அவர் தொடர்பு கொண்ட போது, அவரின் தேதிகள் யாவும் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில்,மூன்று மாதங்கள் பொருத்திருக்குமாறு முருகதாசிடம் சொல்லியிருக்கிறார் அக்ஷேய் குமார்.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துள்ளார்.இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த போது, அவரின் அடுத்த கட்ட இயக்கத்தை பற்றியும், "துப்பாக்கி"படத்தின் கதை பற்றியும் சந்திரசேகரிடம் கூறியுள்ளார் முருகதாஸ்.
கதை முழுவதையும் கேட்ட சந்திரசேகர், இக்கதையானது விஜய்க்காகவே எழுதப்பட்டது போல் இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் விஜயின் தேதிகள் தற்போது ஒப்பந்தமாகாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதன் பின்னரே இப்படத்திற்காக நடிகர் விஜய் ஒப்பந்தமானதாக கூறியிருந்தார் முருகதாஸ்.