Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை போராட்டக் களத்தில் வந்து படிக்கும் மாணவர்கள் (படம்)

இடிந்தகரை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. முன்பெல்லாம் இம்மக்களுக்கு போதுமான அளவு மின்சாரம் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது இவர்கள் அணு உலைக்கு எதிராக போராடுவதால் அரசு இவர்களுக்கு மின்சாரம் மறுத்து வருகிறது. ஒரு நாளைக்கு இவர்களுக்கு கிடைக்கும் மின்சாரம் வெறும் ஐந்து மணி நேரம் தான் . இந்த ஐந்து மணி நேரத்தில் இங்குள்ள குழந்தைகள் எவ்வாறு படிக்க முடியும்? அதனால் இக்குழந்தைகள் போராட்டம் நடைபெறும் திடலுக்கு வந்து படிக்கின்றனர். காரணம் இங்கு எரிபொருள் மூலம் இயங்கும் மின்னுற்பத்தி சாதனம் உள்ளது . அதனால் இங்கு சில மணி நேரங்கள் வெளிச்சம் கிடைக்கிறது. தமிழக அரசின் அலட்சிய போக்கால் தமிழகமே இருளில் மூழ்கி இருந்தாலும் , இந்த பகுதியில் மற்ற இடங்களை காட்டிலும் மின்வெட்டு அதிகம் தான் . இதனால் இக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலும் இவர்கள் அணுஉலைக்கு எதிராக தங்களின் போராட்டத்தை கைவிடவில்லை . போராட்டத்தில் இம்மாணவர்களும் ஈடுபடுகின்றனர் என்பது வியக்கத்தக்கது . 





[vuukle-powerbar-top]

Recent Post