Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரிக்கட் போட்டியில் இலங்கை தோல்வி - யாழில் வெடிகள் கொழுத்தி ஆரவாரம்

ரி.20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தேற்றதையடுத்து யாழ்.குடாநாடு முழுவதும் இளைஞர்கள் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.
இவ்வாறு வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

ரி.20 உலக கிண்ண பேட்கள் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டிகளின் நேரடி காட்சிகள் யாழ்.குடாநாட்டில் உள்ள பல பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமான கிரிக்கட் ரசிகர்கள் பார்வையிட்டனர்.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி படுதேல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து இலங்கை அணியின் தேல்வியைக் கொண்டாடும் முகமாக இளைஞர்கள் வெடிகொழுத்தியும், சத்தமிட்டும் ஆராவரம் செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த இலங்கை இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு வெடிகொழுத்தி ஆரவாரம் செய்பவர்களை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை இராணுவத்தினர் வீதிகளில் அலைந்து திரிவதையும் காணக்கூடியதாக உள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post