Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை - காவல்துறை ஆணையரிடம் மனு

பாடகி சின்மயி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை காவல்துறை ஆணையரிடம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு புகார் மனு அளித்துள்ளது. 

பொது இடமான டிவிட்டர்,முகநூல் போன்ற இணையத்தில் சாதித்துவம் பற்றிய கருத்துகளை வெளியிட்டுள்ள சின்மயி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக சின்மயியிடம் இணையத்தில் ஆபாசமாக பேசியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.ஆனால் சின்மயி வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் புலால் உணவு உண்ணும் பெரும்பாண்மை மக்களை கிண்டல் செய்வது போன்ற கருத்துகளால் பலரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ள சின்மயி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ளது.மேலும் பல எழுத்தாளர்களும் சின்மயி வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து எழுத்தாளர் மனுஷியபுத்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சின்மயிக்கு ஆதரவாக நான் தெருவில் இறங்கி போராடவும் தயார் ஆனால் அவர் மீன்வர்கள் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் இணையதளத்தில் நடந்த விவாதத்தில் இரு தரப்பினர் மேலும் குற்றம் உள்ள நிலையில் ஒரு தரப்பினர் மற்றும் கைது செய்யப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பல கொடுமைகள் நடக்கும் போது இந்த புகாரின் மேல் மட்டும் உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை மீதும் மக்கள் அதிர்ப்தியில் உள்ளனர். இனிமேல் புகார் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் பிரபலமாக மாற வேண்டுமா? என கேள்வி எழுந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post