Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்து!


இலங்கையில்  இடம்பெறும் வீதி விபத்து மற்றும் திடீர் விபத்துக்கள் காரணமாக ஆண்டிற்கு ஆயிரத்து 500 பேர் நிரந்தரமாக அங்கவீனமாவதாக தெரிவித்துள்து.
வருடாந்தம் சுமார் 80 ஆயிரம் திடீர் விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை வீதி விபத்துகள் மற்றும் கவனமின்மையால் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் திடீர் விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 20 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்கு அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படவேண்டியது அவசியமென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post