Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசியல் தலையீட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இலங்கை நீதித்துறை

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய மாவட்ட நீதிபதிகள், நீதிவான்களுக்கான அவசர பொதுச்சபைக் கூட்டம் ஒன்று இன்று நடத்தப்படவுள்ளது.

நீதிச்சேவை அதிகாரிகளின் சங்கத்தின் செயலரான கொழும்பு மாவட்ட மேலதிக நீதிவான் பிரதீப ஜெயதிலக இந்த அவசர பொதுச்சபைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட முடிவு செய்துள்ளார்.

அதேவேளை, நாளை பிற்பகல் கொழும்பு நகர மண்டபத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதித்துறையில் அரசியல் தலையீட்டைக் கண்டித்தும் நேற்று கொழும்பில் சட்டவாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது இலங்கையின்  நீதிச்சேவைக்கு மரணச்சடங்கு நடத்துவதை வெளிப்படுத்தும் வகையில் சவப்பெட்டி ஒன்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று அதற்கு இறுதிச்சடங்குகளை நடத்தினர்.

இதில் 500 இற்கும் அதிகமான சட்டவாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தியதால், நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post