Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் கவர்ச்சியாக நடிக்க ஆசைப்படும் நயன்தாரா.


"வல்லவன்","பில்லா","ஏகன்",மற்றும் "வில்லு" ஆகிய படங்களில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.இப்படங்களில் அவர் காட்டிய கவர்ச்சியால், அவர் நடித்து வெளியான அனைத்துப் படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட விடவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது.

 இதற்கிடையே,நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார்  நயன்தாரா. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததால்,படங்களில் இனி  நடிக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். ஆயினும் அவருடனான காதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு இனி படங்களில் நடித்தாலும், கவர்ச்சிக்கு இடமில்லை என கூறிய நயன்தாரா, இதன் காரணமாக தமிழ் மற்றும் தெலுகுவில் தயாராகவுள்ள "டேட்டி பிக்சர்" படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

நயன்தாராவின் இந்த அறிவிப்பினால் அவருக்கு கிடைக்க வேண்டிய பல படங்கள் கை நழுவி வேறு நாயகிகளுக்கு கிடைத்தது. கவர்ச்சி இல்லையேல் சினிமாவில் இனி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணிய நயன்தாரா,இனி  கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் கவர்ச்சி காட்டுவது என்று தான் முடிவு எடுத்திருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.



[vuukle-powerbar-top]

Recent Post