Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாரதிராஜாவை நம்பும் நடிகை இனியா.


"வாகை சூடவா" படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தமிழ் சினிமா இரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர் நடிகை இனியா.இப்படத்தின் பின்னர் சில சுமாரான படங்களில் மட்டுமே  அவர் நடித்திருந்தார். இந்நிலையில்,இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அமீருடன், இனியா நடிக்கவுள்ளார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டாலும், அது உண்மை அற்ற செய்தி என்பதை அவரே கூறியிருந்தார்.

இதற்கிடையே இப்படத்தில் இருந்து  திடீரென அமீர் விலகியதால், மீண்டும் அதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார் நடிகை இனியா.என்றாலும் அப்படத்தில் நடிப்பதற்காக எந்த ஒரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.

தற்போது ஏழு  மலையாள படங்கள் அவர் கைவசம் உள்ள நிலையில், தமிழில் "அம்மாவின் கைபேசி" என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இப்படமானது  தனக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் உறுதியாக உள்ளார் இனியா.

[vuukle-powerbar-top]

Recent Post