Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் விடிய விடிய கனமழை - சாலைகளில் நீர் தேக்கம்

சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.


சென்னையில் கிண்டி,தாம்பரம்,ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் கனமழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் இராமநாதபுரத்திலும் கனமழை பெய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post