Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்., கட்சியினர் நாட்டை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் : நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாட்டை கொள்ளையடிப்பதை பிரதமர் மன்மோகன் சிங் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இதில் பிரதமர் உறுதி காட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

எனினும் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பிரதமரிடம் இருந்து உறுதியை எதிர்பார்க்க முடியாது என்றே நாட்டு மக்கள் கருதுவதாகவும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post