Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராகுல் காந்தி மீது வரி ஏய்ப்பு புகார் - ஓம் பிரகாஷ் செளதாலா குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் மீது முறைகேடாக நிலம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் செளதாலா இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.ஹரியானா மாநிலம் பால்வால் மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 6.5 ஏக்கர் அளவுள்ள நிலத்தை முறைகேடாக ராகுல் வாங்கியுள்ளார் என செளதாலா கூறியுள்ளார்.26 லட்சத்திற்கு வாங்கப்ப்ட்ட நிலத்தை முறைகேடாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.இதனால் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் செளதாலா கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை எப்பொழுதும் போல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நாளே இல்லாமல் ஆகிவிடும் போல.
[vuukle-powerbar-top]

Recent Post