Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் கருணை மனு நிராகரிப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 

மும்பை தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை கடந்த மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார். அதனைத்தொடர்ந்து, கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post