Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சம்பந்தன் தலைமையிலான குழு இன்று புதுடெல்லி பயணம்

இந்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராசா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

தாம் நேரடியாக கொழும்பில் இருந்து புதுடெல்லி செல்லவுள்ளதாகவும், அங்கிருந்து நேரடியாக கொழும்பு திரும்பவுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்குச் செல்லும் திட்டம் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“புதுடெல்லி சென்ற பின்னரே யாருடனான சந்திப்புகள் நடக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

அதுதொடர்பான நிகழ்ச்சி நிரல் ஏதும் எமக்குத் தரப்படவில்லை.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஸ்ணா, நாராயணசாமி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் ஆகியோருடன் சந்திப்பு இடம்பெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

எனினும் நாம் புதுடெல்லி சென்றதுமே அது உறுதியாகும்.

பெரும்பாலும் நாம் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

அதுபற்றிப் பேச விரும்பவில்லை. புதுடெல்லி சென்ற பின்னர் தான் எல்லாம் உறுதியாகும்.

நாம் மூன்று அல்லது நான்கு நாட்கள் புதுடெல்லியில் தங்கியிருப்போம்” என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post