Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலூர் மாவட்டத்தில் நீலம் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தானே புயல் தந்த படிப்பினையின் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நீலம் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றமாக காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்குச் சென்றவர்களும் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க தயார் நிலையில் இருப்பதாகவும், 108 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post