Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்னணு வடிவில் அமெரிக்காவில் புதிய பத்திரிகை

மின்னணு வடிவ புத்தகங்கள் உலகெங்கும் மெல்ல காலூன்ற தொடங்கியுள்ள நிலையில் இதில் குறிப்பிடத்தக்க அடுத்த முன்னேற்றம் நிகழ உள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூஸ்வீக் அச்சு வடிவில் வெளியாவதை வரும் டிசம்பருடன் நிறுத்திக்கொள்ள உள்ளது. 80 ஆண்டுகளாக வெளியாகி வரும் இப்பத்திரிக்கை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் டிஜிடல் வடிவில் வெளிவரும் என அதன் தலைமை செய்தி ஆசிரியர் டினா பிரவுன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மாற்றத்தை பதிப்புத்துறையின் அடுத்த பக்கம் என எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் வர்ணித்துள்ளார். டிஜிடல் வடிவில் வெளியாகும் புதிய பத்திரிகை நியூஸ்வீக் குளோபல் (newsweek global) என்று அழைக்கப்படும் என்றும் இது உலகம் முழுக்க ஒரே பதிப்பாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அச்சுப் பதிப்பு மற்றும் வினியோக தொழிலில் சவாலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியதால் டிஜிடல் முறைக்கு மாற வேண்டியுள்ளது என்று டினா பிரவுன் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post