Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காதலியை மீட்க யாழ். வரணியில் துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய முன்னாள் புலி!

வரணியில் கடந்த 24 ஆம் திகதி மாலை இடம்பெற்ற சரமாரித் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளியில் வந்து உள்ளன. 

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பின்னால் காதல் விவகாரம் ஒன்று உள்ளது. சூடு நடத்தியவர் ஒரு இளைஞன். காதலியின் வீட்டுக்கு அருகில் வைத்துதான் சூடு நடத்தி இருக்கின்றார். 

இவரது காதலியின் பெற்றோர் இக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு. மகளை ஒளித்து வைத்திருந்து இருக்கின்றார்கள். 

இவர் காதலியின் வீட்டுக்குத்தான் சம்பவ தினம் வந்திருக்கின்றார். காதலி எங்கே? என்கிற விபரத்தைக் காதலியின் பெற்றோரிடம் கேட்டு இருக்கின்றார். ஆயினும் காதலியின் பெற்றோர் இவ்விபரங்களை வெளிப்படுத்தவே இல்லை. 

இதனால் இவருக்கு கோபம் வந்தது. யுவதியின் குடும்பத்தினரை அச்சுறுத்த முற்பட்டு இருக்கின்றார். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சூடு நடத்தி இருக்கின்றார். எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்து இருக்கின்றார். 

இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர். 

இவர் நடுவீதியில் நின்று துப்பாக்கியை வைத்து ஆட்களை மிரட்டியமையால் பொதுமக்கள் பயங்கர பீதி அடைந்து விட்டனர். படையினருக்கு தகவல் கொடுத்தனர். 

படையினர் இவரைப் பிடித்துச் சென்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். 

இவரிடம் துப்பாக்கி வந்து சேர்ந்த விதம் குறித்து பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post