Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புலத்தமிழர்களை மிரட்டும் கோத்தா


வெளிநாட்டில் சட்டத்துக்கு முரணாக செயல்படும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களை மிரட்டுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்கலாம் என்று எண்ணி கோத்தபாய மிரட்டல் விடுத்துள்ளார் இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் போது 
கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்படும் சில புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களே நிதி திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சித்தார். இதன்பிரகாரம் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. இருப்பினும், புலிகள் இயக்கத்தினர் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறி மக்கள் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டனர்.
எனினும், மனிதாபிமான நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்த அரசாங்கம், இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களின் நலன்புரி விடயத்தில் கவனத்தைச் செலுத்தி அவர்களை மீள்குடியேற்றம் செய்துள்ளது.
அத்துடன், ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் அகற்றியுள்ளது. புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல், தெளிவான திட்டம் உயர்தர தொழில் தகைமைகளைக் கொண்ட படை அதிகாரிகள் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலமாகவே இந்த மனிதாபிமான நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுக்க முடிந்தது.
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்கள் முறைகேடான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மனிதக் கடத்தல்களை மேற்கொண்டு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலரினால் மேற்கொள்ளப்படும் அந்த சட்டவிரோதமான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post