Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நியுயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடிவிட்டு பாலித கொஹன்ன ஓட்டம்

சான்டி சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியுள்ள நிலையில், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் மூடப்பட்டுள்ளது. 

இங்கு பணியாற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அதேவேளை, நியுயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மன்ஹாட்டனில் உள்ள அதிகாரபூர்வ வதிவிடத்தில் அடைக்கலம் தேடியுள்ளார். 

எனினும் அவரது அதிகாரபூர்வ வசிப்பிடம் வெள்ளத்தினால் சூழப்பட்ட நிலையில், தனித்து விடப்பட்டுள்ளது. 

மன்ஹாட்டன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. 

எப்போதுமே தூங்காத நியுயோர்க் நகரில் தற்போது எல்லா செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டு நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post