Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்னா ஹசாரேவுக்கும் எனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை ~ அர்விந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரேவுக்கும் தமக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என அர்விந்த் கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் இன்று காலை ஹசாரேவை சந்தித்த அர்விந்த், சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அர்விந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தாமும் ஹசாரேவும் இணைந்து செயல்படுவோம் என உறுதியளித்தார்.

மேலும் இருவரது நோக்கமும் ஒன்று, ஆனால் வழிதான் வெவ்வேறு என அன்னா ஹசாரே தம்மிடம் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தேவைப்படும்போது அழைத்தால் உதவத் தயார் என அன்னா ஹசாரேவிடம் உறுதியளித்ததாக கூறிய அர்விந்த், தமக்கும் ஹசாரேவுக்கு இடையே மோதல் இல்லை என தெளிவுபடுத்தினார்.

சமூக ஆர்வலர் குழுவில் இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி தொடங்குவதில் அன்னா ஹசாரேவுக்கு உடன்பாடில்லை என்றும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
[vuukle-powerbar-top]

Recent Post