Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக தொடக்கம்

கடந்த திங்கள் கிழமை ஆரம்பித்த வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 1ந்தேதி ஆரம்பித்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்த நடவடிக்கைகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்கள்.

படிவம் 6 புதிய விண்ணப்பங்களுக்கும், படிவம் 7 பெயர் நீக்கவும், படிவம் 8 பிழை திருத்தத்திற்கும் பயன்படுகிறது. படிவம் 6ஏ வெளிநாட்டு இந்தியர்களின் பெயரைச் சேர்க்கவும், படிவம் 8ஏ தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றவும் உதவுகிறது. 001சி என்ற படிவம் தொலைந்து போன வாக்காளர் அடையாள அட்டைகளின் நகல்களைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது.

அக்டோபர் 7, 14, 21 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் பெயர் திருத்த, சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன.

அக்டோபர் 31ந்தேதி வரைக்கும் நடைபெறவிருக்கும் இந்த வாக்காளர் பட்டியலின் சேர்ப்பு, திருத்த நடவடிக்கைகளில் பல குறைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

பட்டியலில் பெயர் இருந்தும் அட்டை பெறாத இந்தக் குறையைப் பற்றிக் கேட்டபோது தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், 001சி படிவத்தில் அவர்கள் விண்ணப்பித்தால் அடையாள அட்டை வழங்க ஆவன் செய்யப்படும் என்று விளக்கம் தந்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post