Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்களத்திடம் பறிபோய் கொண்டிருக்கும் தாயகம்

சிங்கள அரசு திட்டமிட்டு செய்துவரும் நில அபகரிப்பின் அடுத்த நடவடிக்கை வவுனியாவில் அரங்கேறி உள்ளது. வவுனியா வடக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களில் பல கிராமங்களை  சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாட்டை சிங்கள அரசு முன்னெடுத்து வருகிறது 

வவுனியா வடக்கிலுள்ள பல தமிழ்க் கிராமங்களில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தனிக்கல், டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய பாரம்பரிய தமிழ்க் கிராமங்களே இவ்வாறு சிங்களக் கிராமங்களாக உருமாறி விட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வடக்கிலுள்ள நெடுங்கேணிப் பிரதேசத்தின் வெடிவைத்தகல்லுக் கிராமத்துக்கு அப்பால் எந்தவொரு தமிழ் அதிகாரிகளோ அல்லது மக்களோ செல்ல முடியாத அவல நிலையே நீடிப்பதாகத் தெரிய வருகின்றது. மேலும் 1984 ஆம் ஆண்டு வவுனியா வடக்கின் பல கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையே நீடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இங்கு வந்து மீள்குடியமர்வதற்கு மக்கள் தயங்குவதாக அரச அதிகாரிகள் கூறிய போதிலும் ஒதியமலையில் நிகழ்ந்த படுகொலை தொடர்பான அச்ச உணர்வு மக்களின் மனங்களிலிருந்து இன்னமும் மறையாத நிலையிலேயே உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனால் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று மீள்குடியமர்வதில் அவர்கள் தாமதம் காட்டுகின்றனர்.
மேலும் புலம்பெயர்ந்தவர்கள், போரில் இறந்தவர்கள் ஆகியோரின் காணிகளை அரசுடைமையாக்கும் செயற்றிட்டமொன்று அரசினால் வவுனியா வடக்கில் துரிதமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இதற்கு இங்குள்ள தமிழ் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என்றும் இங்குள்ள மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post