Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அதிபருக்கு எதிரான சதித்திட்டம் இல்லையாம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச டுபாய்க்குப் பயணம் செய்யவிருந்த விமானம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதில் எந்தவிதமான சதித் திட்டங்களும் இல்லை என்று, இலங்கையின் விமான சேவை பணிப்பாளரும், நிறைவேற்று அதிகாரியுமான கபில சந்திரசேன தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் பயணம் செய்யவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், வேறு விமானத்தில் அவர் பயணம் செய்ய நேரிட்டது. 

விமானங்களில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்படுவது வழக்கமே. மிகமிக மக்கிய பிரமுகர் பயணம் செய்யும் விமானம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. 

பொறியியலாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கண்டறிந்ததும் உடனடியாக இந்த விவகாரத்தை இலங்கை அதிபரின் பாதுகாப்பு பிரிவுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். 

அவர்கள் குழப்பமடைந்ததால், இலங்கை அதிபரின் பயணம் தாமதமாகியது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
[vuukle-powerbar-top]

Recent Post