Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வைகோ பங்கேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2009 செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தொடுத்த ரிட் மனு மீதான விசாரணை, இன்று அக்டோபர் 01 உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

தொடக்கத்தில் இருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், தற்போது உச்சநீதிமன்றத்திலும் வழக்காடி வரும் வைகோ அவர்கள், இன்றும் கலந்துகொண்டு வாதாடினார். 

கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையை, செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து தனியாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால், அதனுடைய பிரதியை இந்த வழக்கில் சம்மந்தப்பட்டு உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் முன்கூட்டியே தர வேண்டும் என்றும் ஆணையிட்டது. 

மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் அறிக்கை, இன்றுதான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தனது வாதத்தில் முன் வைத்த வைகோ, அறிக்கையின் நகல் எதுவும் தங்களுக்குத் தரப்படவில்லை; தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிமும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதில் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றன என்று கூறினார். 

அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் அவர்கள், வைகோவைப் பார்த்து, “அனைத்துப் பத்திரிகைகளிலும் உங்கள் புகைப்படம் தான் காணப்பட்டது, மத்தியப் பிரதேசம் சென்றீர்களே அந்தப் பிரச்சினை எந்த அளவில் இருக்கிறது?” என்று கேட்டார். 

“அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது” என்று வைகோ கூறினார். இந்த வழக்சின் அடுத்த விசாரணையை, வைகோவுக்கு வசதியான தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி பட்நாயக் கூறினார். 

அக்டோபர் 9 ஆம் தேதி விசாரணை வைத்துக்கொள்ளலாம் என்று வைகோ வேண்டினார். அதன்படியே வழக்கு விசாரணை, அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி பட்நாயக் அறிவித்தார். 

இந்த விசாணையின்போது, ம.தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் அவர்களும் கலந்து கொண்டார். ‘தாயகம்’ தலைமை நிலையம் சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க. 01 .10.2012
[vuukle-powerbar-top]

Recent Post