Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் ~ ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நிலவும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான தங்கள் போராட்டத்தை எதிர்ப்பாளர்கள் கைவிட வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமை்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார். 

கூடங்குளம் அணுஉலையை விரைவில் துவக்குவதற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லால் இந்தியாவிற்கும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று கூறிய அவர், 

இது விஷயத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்றார். காவிரி நீரை தர கர்நாடகம் மறுத்து வரும் நிலையில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, இயற்கையே மழை மூலம் தண்ணீர் தரத் தொடங்கி இருப்பதாகவும் வாசன் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post