Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுடெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு இன்று கொழும்பு திரும்புகிறது

இந்திய வெளிவ்வகார அமைச்சர் எஸ்எம். கிருஸ்ணாவின் அழைப்பின் பேரில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்ட இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கொழும்பு திரும்பவுள்ளது. 

கடந்த 10ம் நாள் புதுடெல்லி சென்ற இந்தக் குழுவினரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோர் கடந்த 11ம் நாள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். 

அதையடுத்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், எதிர்க்கட்சிதலைவி சுஸிமா சுவராஜ் ஆகியோருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். 

மேலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஒரு டசினுக்கும் அதிகமான பிரதிநிதிகளையும் புதுடெல்லியில் சந்தித்து இவர்கள் அரசியல் பேச்சுக்களின் நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். 

இவர்களுக்கு புதுடெல்லியில் உள்ள  இலங்கை தூதரகத்தில், இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வெள்ளிக்கிழமை இராப்போசன விருந்தளித்தார். 

புதுடெல்லி சந்திப்புகளை நேற்று முடித்துக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று கொழும்பு திரும்பவுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post