Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் 12 புதிய முகங்கள் இடம் பெறக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதேபோல பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்கிய போதிலிருந்தே அமைச்சரவையில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. 

இந்நிலையில் இன்று பெரிய அளவில் மத்திய அமைச்சரவை விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதன் பொருட்டு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் மகாதியோ சிங் கண்டேலா, நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை இணையமைச்சர் வின்சென்ட் பாலா, ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் அகதா சங்மா உள்பட 7 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

இவர்களது ராஜினாமாவை பிரதமரின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கேபினட் இலாக்காக்கள் மாற்றம் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி, வர்த்தக துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவுக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள குலாம் நபி ஆசாத், பெட்ரோலியத் துறைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையை கவனித்து வரும் ஜெய்ப்பால் ரெட்டிக்கு மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்படக்கூடும் என கூறப்படுகிறது. 

மனித வளத் துறையோடு, தொலைத் தொடர்புத் துறையையும் இதுவரை கவனித்து வந்த கபில் சிபல், தொலைத் தொடர்புத் துறையை மட்டும் கவனிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

அமைச்சரவையில் புதிய முகங்கள் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக உள்ள புரந்தேஸ்வரி, அஜய் மக்கான் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவர் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இணையமைச்சர்களாக உள்ள சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் வாயப்பை நழுவவிட்ட ஹரீஷ் ராவத் சுகாதாரத் துறை அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. 

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றிய சிரஞ்சீவி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி, கே.ரகுமான்கான் உள்பட 10 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம் பெறக் கூடும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post