Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமரை சந்திக்கும் எஸ்.எம். கிருஷ்ணா


கர்நாடகா மாநில தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்திக்க உள்ளார். பிரதமரை சந்திக்கும் கர்நாடக அரசியல் கட்சியினர் குழுவில், மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, பாரதிய ஜனதா தலைவர் அனந்த் குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

 இந்த சந்திப்பின் போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலும் உடனிருப்பார் என்ற கூறப்படுகிறது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி ஆணையக் கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவை, மறுபரிசீலனை செய்யும்படி, இந்த சந்திப்பின் போது கர்நாடக தலைவர்கள் வலியுறுத்த உள்ளனர். வரும் 11ஆம் தேதி, காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், இம்மாதம் 15ம் தேதியில் இருந்து கர்நாடக தண்ணீர் திறந்துவிட வேண்டிய அளவு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post