Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரைக்கு வர தயாராகும் ராதாமோகனின் அடுத்த படைப்பு.


பிரகாஷ் ராஜின் "டூயட் மூவீஸ்" படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக, இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த "அழகிய தீயே","மொழி", "அபியும் நானும்" மற்றும் "பயணம்"போன்ற படங்கள் தமிழ் சினிமா இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த வரிசையில் மீண்டும் இணைந்துள்ள பிரகாஷ்ராஜ் மற்றும் ராதா மோகன் ஆகியோர் புதிய படமொன்றை உருவாக்கிகொண்டுள்ளனர்.நடிகர் சிரஞ்சீவியின் மருமகனான அல்லு சிரிஷ் நாயகானாக நடிக்கும் இப்படத்தில் "விக்கி டோனர்"படத்தில் நடித்த நாயகியே இப்படத்திலும் நடிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

அண்மையில் இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சிக்காக, மிக பெரிய சண்டை காட்சி ஒன்றை படமாக்கிகொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சிரிஷ் மூக்கில் பலமாக அடிப்பட்டது.அவருடைய மூக்கிலிருந்து ஏராளமான இரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது.உடனடியாக அருகிலிருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அதிஷ்டவசமாக எந்த ஒரு பாதிப்பும் இருக்கவில்லை.

சிரிஷ் நடிக்கும் முதல் படம் இது  என்பதால் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு துணை நடிகரும் இல்லாமல் அவராகவே நடித்திருந்தார் அதனாலேயே அவருக்கு பலத்த அடி பட்டுள்ளது.

"ஆடுகளம்" படத்தின் "ஒத்த சொல்லாலே" என்ற பாடலுக்கு தேசிய விருது வாங்கிய நடன இயக்குனர் தினேஷ் மேற்பார்வையில், மேற்படி படத்திற்கான ஒரு குத்து பாடல் படமாக்கப்பட்டது.

இந்த பாடலுக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து  மிக விரைவில் திரைக்கு வர ஆயத்தமாகிறது இப்படம்.

[vuukle-powerbar-top]

Recent Post