Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகத்தில் மத்திய குழுவினர் ஆய்வு : மாநில தலைமைச் செயலருடன் சந்திப்பு

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண, பெங்களூரு சென்ற மத்திய குழுவினர் இன்று காலை கர்நாடக மாநில தலைமை செயலாளர் எஸ்.வி. ரங்கநாத்தை சந்தித்து பேசினர். கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்களை நீர் பாசனத்துறை அதிகாரிகளிடம் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து, காவிரிப் படுகையில் ஆய்வை மேற்கொள்ள அவர்கள் மாண்டியா புறப்பட்டு சென்றனர். கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளை ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

எடியுரப்பா தர்ணா : இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கப்படுவதை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியுரப்பா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

கர்நாடக ரக் ஷன வேதிக் என்ற அமைப்பினரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் தனித்தனியாக பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post